தனுஷின் ‘அசுரன்’ படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகரின் மகன்.! யாருன்னு பாருங்க.!

0
898
Asuran
- Advertisement -

வடசென்னை படத்திற்குப் பிறகு வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்த மஞ்சு, நடிகர் திலீப்பைக் காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்.

-விளம்பரம்-

வட சென்னை ஆடியோ விழாவில் பேசிய தனுஷ், வடசென்னையை மூன்று பாகமாக எடுக்க உள்ளோம். ஆனால் அதற்கு முன்னதாக நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். பிறகு அசுரன்; என்ற தலைப்பையும் தனுஷ் வெளியிட்டார்.

- Advertisement -

அதன்படி அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இதனையடுத்து இரண்டு படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகின. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நிலையில் இப்படத்தில் பிரபல காமெடி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸிஸின் மு கென் கருணாஸ்
க்கிய ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

-விளம்பரம்-

இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம் நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர் . அதே போல நடிகர் கருணாஸும் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கருணாஸை அடுத்து அவரது மகனும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.


Advertisement