இல்லனா இப்படி அழகான மனைவி கிடைச்சிருக்குமா. யோகி பாபுவிற்கு குவியும் வாழ்த்து. ஆனால் உண்மை என்ன ?

0
505427
Yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்களான வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பின்னர் இன்றைய தலைமுறையின் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருவது யோகிபாபு தான். காமெடியனாக மட்டுமல்லாமல் படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் யோகிபாபு.

-விளம்பரம்-

தர்மபிரபு, ஜாம்பி போன்ற படங்களில் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களில் படத்தில் காமெடியனாக நடித்து வரும் யோகி பாபு இருக்கு இந்த ஆண்டு மட்டும் 19 படங்கள் கைவசம் உள்ளது. அதே போல ஒரு நாளைக்கு நடிகர் யோகிபாபு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் யோகி பாபுவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : அப்பாவான ரியோ ராஜ். மனைவிக்கு நடத்திய வளைகாப்பு. புகைப்படங்கள் இதோ.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் யோகி பாபு தனது ஹெலோ வலைதள பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் அவளும் நானும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இவங்க தான் உங்கள் வருங்கால மனைவியா என்று கமன்ட்களை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அதற்கு யோகி பாபு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

ஆனால், தனது அடுத்த பதிவில் நடிகர் யோகி பாபு, திறமைக்கு தான் எல்லாமே. இல்லாட்டி எனக்கு இப்படி அழகான மனைவி கிடைச்சு இருக்குமா. அதனால திறமையை மட்டும் வழங்குகிற உங்களை எல்லாம் தானே தேடிவரும். இது என்னுடைய அட்வைஸ். கேட்டா கேளுங்க, நல்லா இல்லாட்டி விட்ருங்க என்று பதிவிட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். எனவே, யோகி பாபுவின் வருங்கால மனைவி இவர்கள் தான் என்று முடிவு செய்து விட்ட ரசிகர்கள், யோகி பாபுவிற்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். ஆனால், இவர் தான் யோகி பாபுவை திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா இல்லை வேறு எதாவது பட ப்ரோமோஷனுக்காக இப்படி யோகி பாபு செய்துள்ளாரா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement