ஆமா, யார் நீங்க ? வர்ணனையாளர் கேட்ட கேள்வி – ரன்வீர் சிங்கின் பதிலை பாருங்க.

0
334
ranveer
- Advertisement -

நீங்க யார்? என்று கேட்ட வர்ணனையாளருக்கு கூலாக ரன்வீர் சிங் அளித்து இருக்கும் பதில் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர்.

- Advertisement -

ரன்வீர் சிங்கின் ஸ்டைல்:

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவது தான் ரன்வீரின் ஸ்டைல் . மேலும், பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் கூட ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்து இருந்தார்.

ரன்வீர் சிங்கின் நிர்வாண போஸ்ட்:

ஹாலிவுட் நடிகர் நிர்வாண பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். ஒரு சிலர் ரன்வீர் சிங் எடுத்த முயற்சியை பாராட்டினாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் நீங்க யார்? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு ரன்வீர் சிங் அளித்திருக்கும் பதில் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

F1 கார் பந்தயம்:

அதாவது, தற்போது நடந்த F1 கார் பந்தயத்தை நேரில் பார்ப்பதற்கு ரன்வீர் சிங் அபிதாபி சென்று இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், ரன்வீர் சிங்கிடம் முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸர் மார்ட்டின் அவர்கள் பந்தயம் முடிந்த பிறகு தற்போது தாங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரன்வீர் சிங் எப்போதும் போல ‘On top of the world’ என்று தன்னுடைய உற்சாக பானியில் கூறியிருக்கிறார். இதனை அடுத்து ரன்வீர் சிங் யார் என்பதை மறந்த மார்ட்டின் உங்களை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என்று கேட்டிருக்கிறார்.

ரன்வீர் சிங் அளித்த பதில்:

அதைக் கேட்ட நடிகர் ரன்வீர் சிங் அதிர்ச்சி அடையாமல், அழகாக சிரித்தவாறு, நான் ஒரு பாலிவுட் நடிகர். இந்தியாவின் மும்பையை சேர்ந்தவன். நான் ஒரு என்டர்டைனர். நான் அணிந்துள்ள ஆடைகளை மறுநாள் காலை திருப்பி தர வேண்டும் என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வர்ணனையாளருக்கு ரன்வீர் சிங் அளித்த பதில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.

Advertisement