வீ.ஜே அஞ்சனாவின் கணவர் மீது 5 கோடி ஏமாறியதாக புகார் பதிவு – விபரம் உள்ளே

0
550
anjana
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீ.ஜே வாக இருந்தவர் அஞ்சனா. இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இவருக்கும் கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கயல் சந்திரனுக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனது.

vj-anjana

தற்போது கயல் சந்திரன் திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் Two Movies Buffs (ரகுநாதன்) என்னும் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து சந்திரனும் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

இவர்களுடன் சேர்ந்து அக்ராஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்தின் பிரபு வெங்கடாசலத்தை இந்த படத்திற்கு இணை தயாரிப்பாளராக சேர்த்தனர். மேலும், படத்தின் தயாரிப்பிற்காக வெங்கடாசலம் 5 கோடி ரூபாய் சந்திரனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், கடைசியாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட போது ஆக்ராஸ் மீடியாவின் பெயர் போடவில்லை. இது குறித்து கேட்டபோது, தயாரிப்பில் இருந்து வெங்கடாசலத்தை நீக்கிவிட்டதாகவும், கொடுத்து 5 கோடியை கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

Anjana

ஆனால் தற்போது வரை அந்த 5 கோடி பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக நடிகர் சந்திரன் மற்றும் ரகுநாதன் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் வெங்கடாசலம். இவா் பறந்து செல்ல வா, சிவலிங்கா மற்றும் குற்ற் 23 உள்ளிட்ட படங்களின் வினியோகஸ்தராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement