வசந்த் அண்ட் கோ, வசந்த் தொலைக்காட்சின் நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பொதுவாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலை மக்கள் பார்வைக்கு வைப்படுவது இல்லை. ஆனால், வசந்த குமாரின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

தந்தையின் மரணம் குறித்து பத்திரிகையாளர்களை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28 )சந்தித்த விஜய் வசந்த அப்பா இன்று (28.08.2020) 6.56 மணிக்கு இயற்கை எய்தினார். கொரோனா டெஸ்ட் எடுத்து பின்னர் அவர் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அப்பாவிற்கு வெண்டிலேட்டர் வைக்கக்கூடிய சூழ்நிலை வந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்ஷன் ஆனது. மீண்டும் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை வந்தது.

இதையும் பாருங்க : முதல்ல உங்க முதுக பாருங்க – சித்ராவிற்கு மறைமுக பதிலடி கொடுத்த ஷிவானி.

Advertisement

மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட போது நெகட்டிவ் என வந்தது, கொரோனாவால் அப்பா இறக்கவில்லை. அப்பா நலம் பெற வேண்டும் என்று நினைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் 10 மணி அளவில் அவரது உடல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேரமின்மை காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம், குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisement

அங்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த நிலத்தில் அவரது அப்பா அம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

Advertisement
Advertisement