முதல்ல உங்க முதுக பாருங்க – சித்ராவிற்கு மறைமுக பதிலடி கொடுத்தாரா ஷிவானி.

0
14421
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ரா. இந்த நிலையில் நடிகை சித்ராவின் சமீபத்திய கமன்ட் ஒன்று விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை மறைமுகமாக கிண்டல் செய்வது போல் உள்ளது என்று நெட்டிசன்கள் கமன்ட் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இந்த தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான் இதில் முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.

இதையும் பாருங்க : நான் சென்னையில் பிறந்ததால கிராமத்து வாழ்க்கை எனக்கு – விவாகரத்து குறித்து பேசிய நடிகை நளினி.

- Advertisement -

கடந்த திங்கள் கிழமை (ஆகஸ்ட் 24) சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. நிச்சயதார்த்ததிற்கு பின்னர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் சித்ரா.அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைபடத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர், உங்களிடம் இருந்து கிளாமர் போஸை எதிர்பார்க்கிறேன் என்று கமன்ட் செய்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is gvt.jpg

அதற்கு பதில் அளித்த சித்ரா, அது இங்கே நடக்காது. வேணும்னா பயோ (சுய விவரம்) -வில் 2000 பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருப்பவர்களிடம் எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார்.சித்ராவின் இந்த கமன்ட் ஷிவானியை தான் குறிக்கிறது என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஷிவானி தான் தனது இன்ஸ்டாக்ராமின் பயோ பகுதியில் தான் 5.5.2001ல் பிறந்தவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகை ஷிவானி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில், என்னை வெறுத்தும் நான் போடும் அனைத்து பதிவகளை பார்க்கிறாய் என்றால், நீ என்னுடைய ரசிகர் என்றும் மற்றொரு பதிவில், மீண்டும் சொல்கிறேன், மற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார் என்று குறிப்பிட்டுள்ளார். ஷிவானியின் இந்த பதிவு சித்ராவிற்கு மறைமுக பதில் போல தான் இருக்கிறது.

Advertisement