வீரம்,வேதாளம், விஸ்வாசம்..!மூன்று படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா..!

By Rajkumar · 28/12/2018

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, யோகி பாபு போன்றவர்களும் நடித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்திற்கு முன்பாக இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் போன்ற மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் வீரம், வேதாளம் படங்களுக்கும் விஸ்வாசம் படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா.

இதையும் படியுங்க : இதுவரை அஜித் படத்திற்கு கிடைக்காத பெருமை..!விஸ்வாசம் முதல் முறையாக இந்த நாடுகளில்..!

விஸ்வாசம் படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே போல வீரம், வேதாளம் படங்களும் வேறு சில மாதங்களில் 10 ஆம் தேதி தான் வெளியாகியது. வீரம் ஜனவரி 10 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டும், வேதாளம் நவம்பர் 10 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டும் வெளியாகியது.

மேலும், வீரம் படம் விஜய் நடித்த ஜில்லா படத்திற்கு போட்டியாக வெளியானது. தற்போது விஸ்வாசம் படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்துடன் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full