இதுவரை அஜித் படத்திற்கு கிடைக்காத பெருமை..!விஸ்வாசம் முதல் முறையாக இந்த நாடுகளில்..!

0
760
Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தம்பி ராமைய்யா,யோகி பாபு போன்ற பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபித்தல் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேரை பெற்றது. தற்போது படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

- Advertisement -

இந்தநிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படம் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டில் வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி நடித்த காலா, 2.0 ஆகிய படங்கள் ரஷ்யாவில் வெளியாகியுள்ளன. தற்போது ரஷ்யாவில் 8 நகரங்களில் விஸ்வாசம் வெளியாக உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ரஷ்யாவில் படத்தை வெளியிடும் பிரசாந்த் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement