‘ஏன் இப்படி இருக்குனு மாஸ்டர் கிட்ட கேட்டா, திமிரா பதில் சொல்றாரு’ சூரி உணவகம் குறித்து வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ.

0
331
- Advertisement -

நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் மீது எழுந்து இருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சூரி. இவர் மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியை சேர்ந்தவர். இவரை பரோட்டா சூரி என்று தான் எல்லோருமே அழைக்கிறார்கள். இவர் 1997 ஆம் ஆண்டு தனது திரைப்படத்தை தொடங்கி இன்று நடித்து கொண்டு இருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகராக சுமார் இதுவரை 120 படங்களுக்கு மேல் தமிழில் மொழியில் படத்தில் நடத்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் பல்வேறு சாதனைகள் மற்றும் சினிமா விருதுகளை பெற்றுள்ளார். பின் கடந்த ஆண்டு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து சூரி அவர்கள் ஹீரோவாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் ஹோட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

சூரி குறித்த தகவல்:

அதில் எட்டு கிளையில் தொடங்கி இப்பொழுது சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒன்பதாவது கிளையான மாதங்களுக்கு சொந்த ஊரின் மதுரையில் மதுரை அரசு மருத்துவமனை அருகில் அம்மன் உணவகம் திறக்கப்பட்டது. அம்மன் உணவகத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அனைத்து மக்களும் சாப்பிட ஏதுவாக உயர்தர வகையில் விலை குறைத்து இவர் உணவு வழங்கி வருகிறார். இவர் சினிமாவின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊரில் ஹோட்டல்களை திறந்து இருக்கிறார்.

சூரி ஹோட்டல்கள்:

அதோடு தன்னுடைய சகோதரர்களின் பெயர்களில் எட்டு கிளைகளை சூரி நடத்தி வருகிறார். அதில் மதுரை தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒத்தக்கடை, செல்லூர், கரிமேடு, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல் போன்ற பல இடங்களில் உணவகம் மற்றும் டீக்கடையை சூரி நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் வகையிலும், குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சூரி துவங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

வாடிக்கையாளர் வைத்த குற்றச்சாட்டு:

இதனால் இந்த உணவகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் சூரியின் அம்மன் உணவகத்தின் மீது செலுத்தி இருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, அம்மன் உணவகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் உடைய அளவு குறைவாகவும், விலை அதிகமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் சூரி அவர்களே, நீங்கள் தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்து வருகிறீர்கள்.

வீடியோவில் சொல்லி இருப்பது:

உங்கள் உணவகத்தில் நடைபெறும் இது போன்ற குற்றச்சாட்டுகள் உங்கள் பார்வைக்கு வருகிறதா? இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே நடிகர் சூரியின் உணவகத்தில் ஜிஎஸ்டி வரி சரியாக கட்டவில்லை என்று சர்ச்சை எழுந்திருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது குறைவான அளவில் அதிக விலையில் வைத்து உணவுகளை விற்பதாக புகார் எழுந்து இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement