குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் விவரம் இதோ-வைரலாகும் லிஸ்ட்

0
1327
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இதுவரை மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4:

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலர் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இந்த முறை கோமாளியாக இருந்த சிவாங்கி போட்டியாளராக கலந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலில் விசித்ரா, மைம் கோபி, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். பின் எலிமினேஷன் சுற்றில் ஆண்ட்ரியன் தேர்வாகி இருக்கிறார். ஆகவே, இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி, விசித்ரா, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு பேரும் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

டைட்டில் வின்னர் குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மைம் கோபி ஆகியிருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி, மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்து இருக்கிறார்கள். இது உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் இதற்கான எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு பிரபலங்கள் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் வாங்கிய சம்பளம்:

அந்த லிஸ்ட் இதோ, ஒரு எபிசோடுக்கு

சிவாங்கி- ரூ. 20 ஆயிரம்
விஜே விஷால்- ரூ. 25 ஆயிரம்
ராஜ் அய்யப்பா- ரூ. 26 ஆயிரம்
விசித்ரா- ரூ. 30 ஆயிரம்
ஷெரின்- ரூ. 35 ஆயிரம்
சிருஷ்டி, ஆண்ட்ரியன்- ரூ. 30 ஆயிரம்
மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரம்

Advertisement