CWCக்கு மீண்டும் வந்த புகழ் – அடுத்த 5 போட்டியாளர்களுடன் அவர் எடுத்த புகைப்படம் வைரல்.

0
688
pugal
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். பின்னர் மேக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-
pugal

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்கள் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

புகழ் நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து முடித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:

இதனிடையே விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் புகழ் வராததை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் நடுவர்களுக்கு பதிவு போட்டிருந்தார்கள். அதற்கு நடுவர்களும் நிச்சயம் புகழ் வருவார், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழுக்கு பட வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் விஜய் டிவி பக்கம் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தான் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பானது.

-விளம்பரம்-

மீண்டும் குக் வித் கோமாளி செட்டில் புகழ்:

இதில் புகழ்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி செட்டுக்கு புகழ் வந்திருக்கிறார். இதை நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கோமாளி புகழ் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள எபிசோடில் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் புகழ் யாரும் எதிர்பார்க்காத புதிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புகழ்:

இன்னும் சில தினங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 30 துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக நிகழ்ச்சியில் அடிபட்டு வருகிறது. மேலும், இதில் புகழும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement