முடிந்தது குக்கு வித் கோமாளி பைனல் – சிம்பு கையால் பட்டத்தை வாங்கிய போட்டியாளர். (இவருக்கு 3ஆம் பரிசு கூட கிடைக்கலையே பாவம் )

0
1320
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-
cooku

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றனர். அதே போல் கடந்த வாரம் செலிப்ரேஷன் வீக் கொண்டாடபட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.

cooku

இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ரசிகர்களின் பேவரைட்டாக இருந்த பாபா பாஸ்கர் மூன்றாம் இடத்தை கூட பிடிக்கவில்லை என்பது தான் வருத்தம்.

-விளம்பரம்-
Advertisement