என்னோட செல்லத்தம்பி இவன் தான் உங்க கிட்ட காட்டணும்னு தோணிச்சு - நிஷா பதிவிட்ட புகைப்படம்.
பொதுவாக சினிமாவில் எத்தனையோ பெண் காமெடி நடிகைகள் இருந்தாலும் சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம் தான். அப்படி அறிமுகமான பல பெண் மேடை ஸ்டான்ட் அப் காமடியன்கள் விலாசம் இல்லாமல் சென்று விட்டார்கள். காமெடி எங்கள் ஏரியா என்று ஆண்கள் மல்லுக்கட்டி கொண்டு இருக்க பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு ஆண் போட்டியாளர்கள் பிரபலமானார்கள் ஆனார்கள்
https://www.instagram.com/p/B9MyOxahwTH/
ஆனால், பெண் போட்டியாளர்களில் ஆனது என்னவோ அறந்தாங்கி நிஷா மட்டும்தான். இவர் பங்கு பெற்ற சீசனில் பல்வேறு பெண் போட்டியாளர்கள் பங்கு பெற்றாலும் இவர்தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா.
இதையும் பாருங்க : எப்படி இவ்வளவு கலராக ஆனீங்க. விஜய் சேதுபதி பட நடிகை புகைப்படத்தை பார்த்து வியந்த நெட்டிசன்.
தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் இவரது கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னர் தான் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.
சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை கூட பிறந்தது. இரண்டாம் குழந்தை வயிற்றில் இருந்தபோதே சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்து குவித்து கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று இருந்தார் நிஷா இந்த நிலையில் நிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் என்னோட செல்லத்தம்பி இவன் தான் உங்க கிட்ட காட்டணும்னு தோணிச்சு பிரண்ட்ஸ் என்று பதிவிட்டுள்ளார்