எப்படி இவ்வளவு கலராக ஆனீங்க. விஜய் சேதுபதி பட நடிகை புகைப்படத்தை பார்த்து வியந்த நெட்டிசன்.

0
14658
Nanditha swetha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் நந்திதா. நந்திதா அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின் இவர் தினேஷ் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி, தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் முதலில் எதிர்நீச்சல், அட்டகத்தி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் செல்வார். இந்த ஒரு வசனத்திலேயே தற்போது வரை நந்திதா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை நந்திதா அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. நடிகை நந்திதா அவர்கள் யோகா செய்து கொண்டிருக்கும் போது எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் எப்படி இவ்வளவு கலராக ஆனீர்கள். இந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். புகைப்படத்தில் நந்திதா அவர்கள் பயங்கர வெள்ளையாக இருக்கிறார். முன் இருந்த நந்திதாவிற்கும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நந்திதாவிற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது என்றும் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நந்திதா நடித்து வருகிறார்.

நந்திதா இந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்து உள்ளாராம். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும், இந்த படத்திற்கு ‘நர்மதா’ என்று பெயர் வைத்து உள்ளார்கள். பெண்களை நதியாக குறிக்கிறதுக்காக தான் இந்தப் பெயரை வைத்து உள்ளார்கள். இந்த படத்தில் விஜய் வசந்த், எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.

-விளம்பரம்-
Advertisement