ஹோட்டலில் குறிப்பிட்ட ரூமை புக் செய்ய சொல்லியுள்ள அஸ்வின் – கதை சொல்ல அனுப்பிய தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு.

0
822
aswin
- Advertisement -

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ‘குக் வித் கோமாளி’ 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றவர் அஸ்வின். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துள்ளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-74-1024x516.jpg

அஸ்வினின் சர்ச்சை பேச்சி :

இருந்தாலும் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். தற்போது அஸ்வின் அவர்கள் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

வச்சி செய்த மீம் கிரியேட்டர்கள் :

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை நான் 40க்கும் மேல் கதைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். தூங்காத கேட்ட ஒரே கதை இயக்குனர் ஹரிஹரன் சொன்ன கதை மட்டும் தான். அதனால் தான் இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த படம் நன்றாக வர வில்லை என்றால் படத்தை வெளியிடும் அனுமதிக்கமாட்டேன் என்று பேசி இருந்தார். இதனால் சோசியல் மீடியாவில் அஸ்வின் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தும், நெட்டிசன்கள் அஸ்வினை கிண்டல் செய்து மீம்ஸ்களைப் போட்டு வருகிறார்கள்.

குறிப்பிட்ட அறையில் ரூம் :

இந்நிலையில் இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் அடுத்த கட்டமாக அஸ்வின் குறித்து புதிய ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சமீபத்தில் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதைப்பிடித்து விட்டதால் அந்த தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தில் நடிக்க அஸ்வினை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அஸ்வின் ஒரு முன்னணி நட்சத்திர ஓட்டலில் குறிப்பிட்ட ஒரு ரூம் நம்பர் சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

அஸ்வின் செயலால் கடுப்பான தயாரிப்பாளர் :

பின் அந்த ரூமை புக் பண்ணி விட்டு சொல்லுங்கள் நான் கதை கேட்கிறேன் என்று அஸ்வின் சொல்லி இருக்கிறார். அதற்கு அவரும் சரி என்று கூறி அந்த தயாரிப்பு நிறுவனம் ரூம் புக் பண்ணி இருக்கிறார்கள். மேலும், அந்த ஹோட்டல் அறைக்கு இயக்குனரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு இயக்குனர் காலையிலிருந்து மாலை வரை அஸ்வினுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அஸ்வின் வரவில்லை. ஏன் என்று விசாரித்தால் எனக்கு இன்று மூடு சரியில்லை நாளைக்கு மீட் பண்ணலாம் என்று அஸ்வின் கூறிவிட்டாராம்.

அஸ்வினுக்கு பதில் கவின் :

இதனால் கடுப்பான தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தில் அஸ்வினுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். அது கவின் என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்னும் மீண்டும் அஸ்வின் குறித்து பல மீம்ஸ்களை அள்ளி வீசி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து அஸ்வின் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement