அட, அஸ்வினுக்கு Vj பார்வதிக்கும் இப்படி ஒரு உறவாமே – பார்வதியே பகிர்ந்த பதிவு.

0
22870
parvathy
- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். அதே போல இவரை பலரும் பிரபல ஆபாச பட நடிகை மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருவதும் வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட இவர் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். ஆனால், இவர் ஒரு சில எபிசோடுகள் மட்டும் தான் வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர், இவருக்கும் பெண்களின் லேட்டஸ்ட் கனவுக் கண்ணான அஸ்வினுக்கு என்ன உறவு என்பதை பகிர்ந்துள்ளார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அஸ்வின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

- Advertisement -

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். அதே போல துருவ் விக்ரம் அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாகவும் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

சமீபத்தில் அஸ்வினுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்த பார்வதி, அஸ்வினை தனக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னரே தெரியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், 2014 முதலே அஸ்வினை தனக்கு தெரியும் என்றும், இவரும் அஸ்வினும் ஒன்றாக விஜய் டிவி ஸ்டார்ஸ் நிகழ்ச்சி ஆடிஷனுக்கு ஒன்றாக கலந்து கொண்டதாகவும் தனக்கும் அஸ்வினிக்கும் இருக்கும் அழகான நினைவு குறித்து பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement