ராஜா ராணி சீரியலில் நடித்துள்ள அஸ்வின். அட, ஆமாங்க உண்மை தாங்க - இதோ வீடியோ.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.
https://www.youtube.com/watch?v=NdMtAiB8uPA
அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டை வால் குருவி' என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.இந்த சீரியலை தொடர்ந்து அஸ்வின் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார்.
இதையும் பாருங்க : 3 ஆம் வகுப்பில் பாகிஸ்தான் பையனால் தான் பெண்ணாக மாற முடிவெடுத்தேன் - ஷகீலாவின் மகள் சொன்ன ரகசியம்.
ஆனால், இவருக்கு பிரபலம் ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த சீசனில் முதல் இடத்தை கனியும், இரண்டாம் இடத்தைஅஸ்வினும் , மூன்றாம் இடத்தை ஷகீலாவும் வென்றனர். அதே போல அஸ்வின் தெலுங்கு சீரியலில் கூட நடித்துள்ளார். ஆம், தெலுங்கு மா டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' என்ற தொடரில் நடித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=kCtgGinGp3M
இந்த சீரியல் தமிழில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி சீரியலின் ரீ - மேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை பற்றி அஸ்வின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் சொன்னது கூட இல்லை. இது ஒருபுறம் இருக்க அஸ்வின் குக்கு வித் கோமாளிக்கு பின்னர் 'குட்டி பட்டாசு' என்ற பாடலில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து traident மீடியா தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் அஸ்வின்.