3 ஆம் வகுப்பில் பாகிஸ்தான் பையனால் தான் பெண்ணாக மாற முடிவெடுத்தேன் – ஷகீலாவின் மகள் சொன்ன ரகசியம்.

0
2957
mila
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

இதையும் பாருங்க : எனக்கு 50ஆயிரம் அவனுக்கு இவ்ளோ குடுத்தாங்க, அத அப்படியே என் கிட்ட கொடுத்துட்டேன் – விவேக் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து.

- Advertisement -

அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் தன்னை பற்றி பல விஷயங்களை கூறி உள்ளார்.

அவருடைய உண்மையான பெயர் ஹிஷாம். துபாயை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இவருடன் படித்த ஒரு பாக்கிஸ்தான் பையனுக்காக பெயில் ஆனாராம். அப்போது தான் ஒரு பையனுக்காக நாம் ஏன் இதை செய்கிறோம் என்று உணர்ந்து தன்னுள் பெண்ணை இருப்பதை உணர்ந்து பெண்ணாக மாறினாராம். அதே போல இவர் லாஸ் வேகாஸ் செல்லும் போது ஒரு பையனை டேட்டிங் செய்தாராம். அவர் கொடுத்த ரூபாய் நோட்டை பத்திரமாக இன்னும் வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement