கைதி படத்தில் நடித்துள்ள புகழ் – இது நாள் வரை இது உங்களுக்கு தெரியுமா ? இதோ அந்த காட்சி.

0
1482
pugal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. முதல் சீஸனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ட்ரெண்டிங்கிற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே, 40 நாள் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடிக்க வேண்டும் என்று புகழ் இடம் கால்ஷீட் கேட்டு இருந்தார்கள். ஆனால், புகழ் நடிக்க மறுத்து விட்டார். இது குறித்து புகழ் பேட்டியில் கூறியிருப்பது, தளபதி படத்தில், அதுவும் லோகேஷ் அண்ணா படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. விஜய் சாரோட படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை,கனவெல்லாம் எனக்கு இருக்கு. கைதி படத்தில் கூட ஒரு கடைசி சீன்லில் நடித்திருப்பேன். ஆனால், அதுல என்னுடைய முகம் தெரியாது. ஏன்னா, நான் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு காரணம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

- Advertisement -

மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது நான் முதலில் மாகாபா அண்ணனிடம் என்ன செய்வது என்று கேட்டேன்.அவர் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்து இருப்பது இந்த நிகழ்ச்சி தான் காரணம். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு செய் என்று கூறியிருந்தார். அதனால் தான் நான் எப்ப வேண்டுமானாலும் தளபதி அண்ணா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து சினிமாவிற்கு படம் நடிக்கலாம் என்று தான் நான் போகவில்லை. அதோடு முதலில் முடி வெட்டினனும் என்று சொன்னார்கள்.

முடி வெட்டினால் யாருக்குமே என்னை அடையாளம் தெரியாது. தளபதி படத்தில் நடித்து இருந்தால் கூட இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். தற்போது இவர் சந்தானம் படத்தில் நடித்து வருகிறார். அதே போல தற்போது இவர் அருண் விஜய் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கி உள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, பிரகாஷ் ராஜ் என்று பலர் கமிட் ஆகியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement