பிக் பாஸ் 5ல கலந்துக்க கூப்டாங்க, ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பளம், நான்தா போல - CWC பிரபலம் கொடுத்த ஷாக்.

By Rajkumar · 6/9/2021

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தும் அதனை நிராகரித்து உள்ளார் குக்கு வித் கோமாளி பிரபலம். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. இதுவரை 4 சீசன் நிறைவசைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இதனால் இந்த சீசன் அடுத்த மாதத்தில் துவங்கிவிடும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் என்று பல்வேரு பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி அடிபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குக்கு வித் கோமாளி போட்டியாளர்களான கனி, சுனிதா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், பவித்ரா என்று பலரிடம் இந்த சீசனில் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது.

இதையும் பாருங்க : தன் 13வது திருமண நாளில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நீலிமா.

இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி போட்டியாளரான நடிகை தீபாவிற்கு பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், அதனை மறுத்துள்ளார் தீபா. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், பிக் பாஸ்ல கலந்துகிட என்னையா கூப்டாங்க, போனா ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிடைக்கும் நல்ல வருமானம் தான். என்னால போயிருக்க முடியும்.

ஆனா, பணத்தை விட சுயமரியாதை முக்கியம். நான் காசு பணத்திற்கு அடிமை அல்ல, அன்புக்குத்தான் அடிமை என்று மீண்டும் தனது வெகுளுதடன் தன் நேர்மையையும் நிரூபித்து இருக்கிறார் தீபா. இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் முதல் போட்டியாளராக பிரபல நடிகை ஷகீலாவின் தத்து மகளான மிலா, உறுதியாகி இருப்பதாக நம்பகரமான தகவலலும் வலியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full