தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகளே அதிகம். அந்த வகையில் பிரபல நடிகையான நீலிமா ராணியும் ஒருவர். உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள இவர், இதுவரை பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இதுவரை தமிழ் சினிமாவை பிரசாந் நடித்த விரும்புகிறேன்,சிம்பு நடித்த தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமக நடித்தார்.மேலும் சில வருடங்கள் கழித்து மொழி ,ராஜாதி ராஜா,சந்தோஷ் சுப்ரமணியன், நான் மஹான் அல்ல போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற தெலுகு சீரியளில் தான்.
அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுகு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார். இதுவரை 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அரன்மனை கிளி ‘ தொடரில் நடித்து வந்தார். அரண்மனை சீரியலில் இருந்து திடீரென்று விலகினார் நீலிமா.
நடிகை நீலிமா ராணி சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியளில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது 13 வது திருமண நாளை கொண்டாடினார். இதே நாளில் தான் இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.