இன்றைய குக் வித் கோமாளி எபிசோடை நீக்கிய ஹாட் ஸ்டார் – காரணம் என்ன தெரியுமா ? இப்படி ஒரு பிரச்சனையாம்.

0
12817
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

இதையும் பாருங்க : கடற்கரையில் நீச்சல் உடையில் சின்னத்தம்பி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வாரம் இறுதி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் செலிப்ரேஷன் வீக் கொண்டாடபட்டு வருகிறது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்தார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடை காலையில் தனது தளத்தில் பதிவேற்றியிருந்த ஹாட் ஸ்டார் திடீரென நீக்கியது. நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கேட்டு ஹாட் ஸ்டாரை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். தங்களது பயனாளர்களுக்கும், குக் வித் கோமாளி ரசிகர்களுக்கும் பதில் அளித்த ஹாட் ஸ்டார் நிர்வாகம் சில மியூசிக் காப்பி ரைட்ஸ் காரணமாக இன்றைய எபிசோடை நீக்கியாக கூறியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement