அட, குக் வித் கோமாளி தீபாக்காவின் முத்தான இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா ?

By Rajkumar · 11/1/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.

இதையும் பாருங்க : இதெல்லாம் ஆரியின் PR பண்ற வேல, இதெல்லாம் போலி - ரியோக்கு ஆதரவாக ரக்‌ஷன் போட்ட பதிவு. கடுப்பான ஆரியின் ரசிகர்கள்.

இந்த சீசனில் கோமாளிக்கு நிகராக காமெடி செய்து வருபவர்கள் மதுரை முத்து மற்றும் தீபா தான். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான்.

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலம் ஏற்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான். வெகுளித்தமான கிராமத்து மனம்மாறாத இவரது பேச்சில் மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இவருக்கு இரண்டு மகன்கள் கூட இருக்கின்றனர். என் உயிரும் உலகமுமா இருக்கிற என் ரெண்டு மகன்களைப் பத்தி யாராச்சும் சின்னதா ஒரு குறை சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அந்த ஒரு விஷயத்துலதான் எனக்குக் கோபம் வரும். மத்தபடி எதுக்கும் நான் கோபமே படமாட்டேன் என்று கூறியுள்ளார் தீபா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full