விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு தற்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளார்.
இதையும் பாருங்க : ரம்யா பாண்டியனின் தம்பிய பாத்தீங்க – அவரது சகோதரி சுந்தரி பாண்டியனை பார்த்துளீர்களா.
அதே போல ஆரி இதுவரை 11 முறை நாமினேஷனில் வந்துள்ளார். இந்த 11 முறையும் முதல் ஆளாக ஆரி காப்ற்றப்பட்டும் இருக்கிறார். மேலும், ஆரி தான் இந்த சீசன் வின்னர் என்றும் பலரும் கூறி வருகின்றனர். அதே போல தற்போது பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வரும் ஓட்டிங்கில் கூட ஆரிக்கு தான் நெருங்க முடியாத அளவு ஆதரவு இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி தொகுப்பாளராக ரக்ஷன், ஆரி பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு சிக்கலில் சிக்கியுள்ளார்.
அதில் ஆரிக்கு தனியார் வலைத்தளங்களில் வரும் வோட்டின் விவரத்தை பதிவிட்டுள்ள ரக்ஷன், இவை எல்லாம் அதிகாரமற்ற வாக்கு எண்ணிக்கை. இது ஆரியின் Pr குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நம்பாதீர்கள். இவை போலியானவை. இன்று 10.30 வாக்கெடுப்பு நடைபெறும் ரியோ ரசிகர்கள் தயாராக இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ஆரி ரசிகர்கள் பலரும் ரக்ஷன் மீது காண்டாகியுள்ளனர்.