திரௌபதி பட புகழ் ஜி மோகன் இயக்க இருக்கும் 'ருத்ர தாண்டவம்' படத்தில் குக்கு வித் கோமாளி பிரபல நடிகை கமிட் ஆகி இருக்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
https://twitter.com/mohandreamer/status/1320244306507042816
அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.
திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு 'ருத்ர தாண்டவம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் பெயர்களை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார் மோகன்.
https://twitter.com/mohandreamer/status/1339903998879416320
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் குக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள தர்ஷா குப்தா இணைந்து இருப்பதாக மோகன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தர்ஷா குப்தா ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் "முள்ளும் மலரும்" என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் "மின்னலே" என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் "செந்தூரப்பூவே" என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.





