உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக பலர் சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையிலும் மக்கள் தங்களை இயல்பாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மிகவும் டிரெண்ட் ஆக இருப்பது FACEAPP எனும் செயலி. இதன் மூலம் ஆண்கள் பலரும் தங்களை பெண் உருவத்தில் மாற்றியும், பெண்கள் தங்களை ஆண் உருவத்தில் மாற்றியும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மணிமேகலை அவர்கள் தன்னுடைய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஃபேஸ் ஆப் சேலஞ்ச் மூலம் தன்னுடைய உருவத்தை ஆண் உருவமாக மாற்றிய புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். ஆண் உருவத்தில் மணிமேகலை எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதேபோல் நடிகை மாளவிகா தனது ஆண் உருவ புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.
https://www.instagram.com/p/CBaVMSgnlPH/
அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.





