நான் ஏமாத்தினேனா – உதவி செய்ய போய் எனக்கு இந்த பேரா. கண்ணீர் விட்டு தர்ஷா வெளியிட்ட வீடியோ.

0
3175
darsha
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல தற்போது ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வெளியேறினார். அதே போல தற்போது இவர் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

லாக்டுவுனுக்கு முன்பாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 25 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தான் பின்தொடர்ந்து வந்தார்கள். ஆனால், இவர் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு பின்னரும் குக்கு வித் கோமாளிக்கு பின்னரும் இவரது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் திட்டி தீர்த்துள்ளனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தர்ஷா, நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை, எனனிடம் சிலர் தங்களுடைய புடவை, கம்மல் போன்றவற்றை விளம்பரம் செய்ய சொல்லி கேட்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் ப்ரோமோஷன் வீடியோ போட முடியாது என்பதால் நான் என் விருப்பத்திற்கு தான் வீடியோ போடுவேன். அதனால் நான் பணம் வாங்காமல் இலவசமாக தான் செய்து கொடுத்தேன். உண்மை தெரியாமல் யாரை அசிங்கமாக பேச வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறிளளார் தர்ஷா.

-விளம்பரம்-
Advertisement