புகழை தொடர்ந்து புதிய காரை வாங்கிய குக்கு வித் கோமாளி பிரபலம் – அமர்க்களம் செய்த கோமாளிகள்.

0
3093
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ரித்திகா, பவித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கனி, பாபா பாஸ்கர், , அஸ்வின் ஆகிய 3 பேர் பைனலுக்கு சென்று உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் புகழ், புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், தனது பரம்பரையிலேயே இதான் முதல் கார் என்றும் கூறியிருந்தார் புகழ்.

இந்த நிலையில் புகழை தொடர்ந்து மற்றொரு குக்கு வித் கோமாளி பிரபலம் கார் வாங்கியுள்ளார். அது வேறு யாரும் இல்லை,, இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் வெங்கடேஷ் பத் தான். சமீபத்தில் இவர் விலையுயர்ந்த BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதில் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் அனைவரயும் ஏற்றி ஒரு ரவுண்டு சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement