ஷிவானி, தாடி பாலாஜியை தொடர்ந்து BMW கார் வாங்கியுள்ள குக்கு வித் கோமாளி பிரபலம்.

0
2892
shivani

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல சமீபத்தில் ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ஷிவானி மற்றும் தாடி பாலாஜியை தொடர்ந்து தற்போது மணிமேகலை Bmw கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

- Advertisement -

மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

ஆனால், இவர்கள் திருமணத்தை மணிமேகலை அம்மா மற்றும் தம்பி ஏற்றாலும் அவரது தந்தை ஏற்காததால் தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர். இன்னமும் கூட வாடகை வீட்டில் தான் மணிமேகலை வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் மணி – ஹுசைன் தம்பதி நேற்று விநாயகர் சதுர்த்தியில் புதிய Bmw காரை வாங்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement