அட, மணிமேகலை கணவர் லாரன்ஸ் படத்துல வந்திருக்காரே. இதுநாள் வரை இத நோட் பண்ணீங்களா?

0
1379
mani
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், கடந்த ஆண்டு நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

தற்போது குக்கு வித் கோமாளி 2 விலும் பங்குபெற்று வருகிறார் மணிமேகலை. மேலும், இவரது கணவர் ஹுசைன், பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர் இவர் லாரன்ஸ் மாஸ்டர் குழுவில் தான் இருந்தார். லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கேட்ட சிவா படத்தில் இடம்பெற்ற ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ என்ற பாடலில் லாரன்ஸ்ஸின் பக்கத்தில் மெயின் டான்சரான ஆடி இருக்கிறார் ஹுசைன்.

-விளம்பரம்-
Advertisement