திருடு போன Ktm பைக், Bmw பைக்கை வாங்கிய ஹுசைன் மணிமேகலை – விலை எவ்ளோ தெரியுமா ?

0
666
manimegalai
- Advertisement -

விஜய் டிவி மணிமேகலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் Ktm பைக் திருடு போனதை அடுத்து தற்போது புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளனர். சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மணிமேகலை பிரபல தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-73.png

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகிறார். அதோடு ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

- Advertisement -

மணிமேகலை-உசேன் திருமணம்:

சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is mani.jpg

மணிமேகலை சின்னத்திரை பயணம்:

அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் ஏன்று சொல்லலாம். மேலும், இவர் Vjவாக இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருப்பதாகவும், 2000கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகள், 120 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250கும் மேற்பட்ட குழுவான நிகழ்ச்சிகள், 100க்கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று 12 ஆண்டுகளில் செய்து இருப்பதாகவும் சமீபத்தில் மணிமேகலை கூறியிருந்தார். அதே போல இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

திருடு போன பைக் :

அது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே மணிமேகலை பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார். அதற்கான புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் மணிமேகலை தங்களுக்கு சொந்தமான பைக்கை தன்னுடைய நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.அதை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். தற்போது இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். மேலும், மணிமேகலை அந்த பைக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருத்தப்பட்டு இருந்தார்.

புதிய Bmw பைக் :

கல்யாணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு காசு சேத்து வச்சு வாங்கின முதல் வண்டி. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்து தான் வருவதோ என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது கணவரின் பிறந்தநாளுக்கு புதிய பைக் ஒன்றை புக் செய்து இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார் மணிமேகலை. இப்படி ஒரு நிலையில் அவர் சொன்னதை போல கணவருக்கு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதுவும் bmw g 310 gs rallye edition என்ற பைக்கை வாங்கி இருக்கின்றனர். இதன் விலை 3,40,000 இருக்கும். ஏற்கனவே Bmw கார் வைத்து இருக்கும் இந்த தம்பதி தற்போது Bmw பைக்கையும் வாங்கியுள்ளனர்.

Advertisement