யுனிவர்சிட்டி பர்ஸ்ட், ஜனாதிபதியிடம் பட்டம் பெற்ற குக் வித் கோமாளி பிரபலம் – குவியும் பாராட்டுக்கள்

0
1551
monisha
- Advertisement -

ஜனாதிபதி கையால் குக் வித் கோமாளி மோனிஷா பட்டம் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்காவது சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக முடிவடைந்து இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4:

இந்த முறை நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டு இருந்தார்கள். பின் எலிமினேஷன் சுற்றில் ஆண்ட்ரியன் தேர்வாகி இருக்கிறார். ஆகவே, இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி, விசித்ரா, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு பேரும் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள்.

மோனிஷா குறித்த தகவல்:

இதில் மைம் கோபி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி, மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்து இருக்கிறார்கள். பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் மோனிஷாவும் ஒருவர். இவர் kpy நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருக்கிறார். இவர் மணிமேகலைக்கு கோமாளியாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

மோனிஷா வாங்கிய பட்டம்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மைம் கோபிக்கு கோமாளியாக குரேஷி மற்றும் மோனிஷா இருவரும் இருந்தார்கள். இவர்களுக்கும் தல ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் சிறந்த கோமாளி என்ற பட்டத்தை மோனிஷா வாங்கி இருந்தார். இதனை அடுத்து இவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் மோனிஷா ஜனாதிபதி கையில் பட்டம் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குவியும் வாழ்த்துக்கள்:

அதாவது, மோனிஷா அவர்கள் தற்போது எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா படிப்பு முடித்திருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் இவர் தான் முதல் ரேங்க் எடுத்திருக்கிறார். இதனால் இவருக்கு இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் கையால் பட்டம் வாங்கி இருக்கிறார். இதனை அடுத்து பலருமே அவருக்கு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் மோனிஷா தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement