கிழிந்த புடவையை தொடர்ந்து கடற்கரையில் மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த பவித்ரா.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.
சொல்லப்போனால் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதில் பவித்ராவும் ஒருவர். நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையும் பாருங்க : திருமணமாகி 10 ஆண்டுகள் ஆக போது - குழந்தை குறித்து கேட்ட ரசிகர். பாவனா பதிவிட்ட புகைப்படம்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார் இது சீரியலில் தான் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஸ்வினும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் அழகியான இவர் அடிக்கடி வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்துவது வழக்கம்.
https://twitter.com/shobana40502466/status/1367362212394758146
அந்த வகையில் சமீபத்தில் இவர் கையில் கத்திரிக்கோலுடன் பாதி புடவையை கிழித்து விட்டு இருப்பது போல வித்யாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவ பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்தனர். இப்படி ஒரு நிலையில் மீண்டும் இவரது கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.