திருமணமாகி 10 ஆண்டுகள் ஆக போது – குழந்தை குறித்து கேட்ட ரசிகர். பாவனா பதிவிட்ட புகைப்படம்.

0
3670
bhavana
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார். சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

- Advertisement -

அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.அது மட்டும் இல்லாமல் இவர் தனியாக இசை ஆல்பங்கள் பாடுவது, அதில் நடிப்பது என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.சமீபத்தில் கூட ‘இரண்டாம் குத்து’ படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார் பாவனா. பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆகியிருப்பது பற்றி தெரியாது.

அப்படியே தெரிந்திருந்தாலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பாவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை பாவனா. இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த பாவனாவிடம், ரசிகர் ஒருவர், குழந்தை பற்றி கேட்டிருந்தார். அதற்கு ‘தவறு, எனக்கு ஒரு சகோதரர் இருக்கார். இவர் தான் அது’ நாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு பதில் அளித்துள்ளார் பாவனா.

-விளம்பரம்-

Advertisement