சமந்தா நடித்த இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை - ரீல் சமந்தா பவித்ராவின் ஆசைய பாருங்க.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.
நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.
இதையும் பாருங்க : ஆணுடன் படுக்கையறையில் ஜூலி வெளியிட்ட புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள். ஜூலி கொடுத்த பதிலை பாருங்க.
பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த அதே போன்ற புடவையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படி ஒரு பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு 'நான் உங்களை போலவே இருக்கிறேனா ? ' என்று பதிவிட்டு சமந்தா டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சமந்தா , நீங்கள் மிகவும் அழகா இருக்கிறீர்கள் என்று பதில் அளித்துள்ளார்.
ஆனால், உண்மையில் இது பவித்ராவின் ட்விட்டர் கண்ணாகிய கிடையாதாம். இது பவித்ரா லட்சுமி பெயரில் இயங்கும் போலி கணக்காம், இருப்பினும் தன்னை பாராட்டிய சமந்தாவிற்கு பவித்ரா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பவித்ரா, மந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில், சமந்தாவின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி உள்ளார்.