தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.இவர் என்ன செய்தாலும் இவரை திட்டி தீர்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஜூலி பதில் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். தற்போது ஜூலி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.
இதையும் பாருங்க : என்ன வேனா பேசுங்கடா, நான் ரேடியோவிலும் இருப்பேன், டிவியிலும் இருப்பேன், படத்துலயும் இருப்பேன் – லைவில் கடுப்பான அர்ச்சனா.
கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஜூலி துபாயில் தான் அதிகம் சுற்றி வந்தார். அப்போது அடிக்கடி புகைப்படங்களை கூட வெளியிட்டு வந்தார். ஜூலி துபாய் பார்த்ததற்கு முக்கிய காரணமே துபாயில் இருக்கும் மார்க் ஹம்ரான் என்பவர் தான். இவர் தான் ஜூலியின் பாய் பிரண்ட் என்றும் நினைத்து வந்தனர். அதே போல மார்க், ஜூலியுடன் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
ஆனால், தாங்கள் இருவரும் நண்பகர்கள் என்று கூறி இருந்தார் ஜூலி. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவரை கட்டி அனைத்து முத்தம் கொடுக்க செல்வது போல போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் ஜூலி. இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவர் தான் ஜூலியின் காதலரோ என்று குழம்பினர். ஆனால், அவர் ஜூலிக்கு சகோதரர் மாதிரியாம். இதை பார்த்த ரசிகர்கள் சிலர், என்னதான் தம்பின்னு சொன்னாலும் இத பாக்க கொஞ்சம் வேற மாதிரி இருக்கு என்று கமன்ட் செய்ய, அதற்கு ஜூலி, பாக்குறவங்க கண்ணுல இருக்குமா. இவர் என்னுடைய முதல் பிள்ளை என் அம்மா, எனக்கு எல்லாம் என்று கூறியுள்ளார்.