வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - கல்லறை புகைப்படத்தை பகிர்ந்து உருகிய விஜய் டிவி பிரபலங்கள்.

By Rajkumar · 11/9/2021

கடந்த ஆண்டு மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : விநாயகர் சதுர்த்தியில் சமீபத்தில் பிறந்த தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட NINI சீரியல் பிரபலம்.

இவரது பிரிவால் விஜய் டிவி விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் பாதித்தது., வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். Kpy புகழ், பாலாஜியின் உடலை பார்த்து. அதிலும் புகழ் 'எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா' என்று கதறி அழுது இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று வடிவேலு பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல விஜய் டிவி பிரபலங்கள் அவரின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்திய புகைப்படத்தை வெளியிட்டனர். இதில் புகழ், தனது இன்ஸ்டா பக்கத்தில் வடிவேலு பாலாஜியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உருக்கம் தெரிவித்து உள்ளார். அதே போல விஜய் டிவி இயக்குனர் தாம்சன், வடிவேல் பாலாஜி கல்லறை புகைப்படத்தை பகிர்ந்து உருக்கம் தெரிவித்து உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full