விநாயகர் சதுர்த்தியில் சமீபத்தில் பிறந்த தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட NINI சீரியல் பிரபலம்.

0
1184
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் சசிந்தர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-5.png

இவர் வம்சம் சீரியலில் நந்தகுமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்னர் தொடர்ந்த பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். 2017-ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “தமிழ் கடவுள் முருகன்” சீரியலில் சிவன் மற்றும் வீரபத்திரன் வேடத்தில் நடித்தார் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம்.இந்த சீரியலில் சிவன் வேடத்தை ஏற்று நடித்ததால் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம் 

- Advertisement -

இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சன் டிவி-யில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் முகுந்தன் என்ற கேரக்டரில் நடித்தார். நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனில் நடித்த அவர் தற்போது இரண்டாம் சீசனிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ஷேர் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஸ்பெஷலாக தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement