புகழுக்கு மணிமேகளை விட்ட சவால் – படாத பாடுபட்ட புகழ் – செம fun வீடியோ.

0
1885
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில தினங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிவடைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதர்க்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் இருந்த கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்த்த ஒரு கும்பலும் இருந்தது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நம்ம புகழ்.

- Advertisement -

புகழின் சொந்த ஊர் கடலூர். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் சென்னைக்கு வேலை தேடி வந்துவிட்டார். புகழ் சென்னையில் பார்க்காத வேலைகளே இல்லை. சென்னையில் வேலை செய்யும்போது பல கஷ்டங்களையும், பல பிரச்சனைகளையும் புகழ் அனுபவித்துள்ளார். முதலில் இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் லேடி கெட்டப் மூலம் தான் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலமானார். அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். புகழ் பங்குபெற்ற இதே நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றவர் சன் மியூசிக் மணிமேகலை. இவரும் புகழை போல மிகவும் ஜாலியான பேர்வழி தான். இந்த நிலையில் மணிமேகலை, புகழுக்கு ட் ஷர்ட் சவால் ஒன்றை விடுத்துள்ளார். மணிமேகலையின் சவாலை ஏற்ற புகழ் அதை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement