‘இது என் கனவு’ – புகழ், மணிமேகலை, சரத்தை தொடர்ந்து புதிய காரை வாங்கிய குக்கு வித் கோமாளி பிரபலம். குவியும் வாழ்த்துக்கள்.

0
502
Rithika
- Advertisement -

புகழ், சரத், மணிமேகலையை தொடர்ந்து புதிய காரை வாங்கி இருக்கிறார் குக்கு வித் கோமாளி பிரபலம். சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல சமீபத்தில் ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் பல கோமாளிகள் தான் அடுத்தடுத்து கார்களை வாங்கி வந்தனர். புகழ், சரத், மணிமேகலை, மதுரை முத்து ஆகிய பலரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னரே கார் வாங்கி இருந்தனர். அதே போல நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பத் கூட புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அடுத்த குக்கு வித் கோமாளி பிரபலமும் புதிய காரை வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

குக்கு வித் கோமாளி ரித்திகா :

அது வேறு யாரும் இல்லை சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்ட ரித்திகா தான். இவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். அதிலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாவுக்கும் இடையே நிகழும் காட்சிகளெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. மேலும், இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

இந்தத் தொடரை அடுத்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு ரித்திகா தமிழ்ச்செல்வி நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது ரித்திகா தமிழ்ச்செல்வி அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலையில் வகித்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தொடரிலும் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

புதிய காரை வாங்கிய ரித்திகா :

தற்போது இவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘சொந்த காரை வாங்குவது பலருக்கும் ஒரு கனவு தான், எனக்கும் அப்படி தான். இன்று உங்களின் அன்பு மற்றும் ஆதரவால் என்னுடைய கனவு நினைவாகிவிட்டது. என்று பதிவிட்டுள்ளார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷா, பவித்ரா ஆகிய இருவருமே சினிமாவில் நாயகியாக நடித்துவிட்டார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-225.jpg

ரித்திகா நடிக்கும் படம் :

தற்போது ரித்திகாவும் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக தோன்றியிருக்கும் சதீஷ்க்கு ஜோடியாக ரித்திகா தமிழ்ச்செல்வி நடிக்கிறார். இந்த படத்தை சிக்சர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இவர்களுடன் படத்தில் வித்யா பிரதீப், பாவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை சண்முகம் கிரியேஷன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் கிரிஷ் புரோடக்சன் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.

Advertisement