பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா, விஜயன், வெளியாகி அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல் என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இருந்தார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தோஷ் பிரதாப்.

இந்த படத்திற்கு முன் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு சார்பட்டா பரம்பரை படம் திருப்பு முனையாக அமைந்து விட்டது. ஆனால், இவருக்கு நல்ல பெயரையும், புகழையும் கொடுத்ததே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் டாப் லிஸ்டில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் பட்டாளம் சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். மேலும், கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் எபிசோடில் புதுவித கெட்டப்பில் கோமாளிகள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கடந்த 2 சீசன் களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களாக கிரேஸ், அம்மு, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா ராமன் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கோமாளிகள் செய்யும் காமெடி கலாட்டா தான்.
சந்தோஷ் வெளியேற்றம்:
வாரம் இது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தவர் சந்தோஷ். இந்த நிகழ்ச்சியில் சந்தோஸும் சுனிதாவும் செய்யும் சேட்டைகள் எல்லோருக்குமே பிடிக்கும். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி பரவி கொண்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன் சந்தோஷ் பிரதாப்பின் வெளியேற்றும் பலரையும் அழவைத்து இருந்தது. போட்டியாளர்களும் அவருடைய எழிமினேஷன் நினைத்து கண்கலங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சந்தோஷ் பிரதாப்க்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வீடியோவில் 11 : 20 நிமிடத்தில் பார்க்கவும் :
https://www.youtube.com/watch?v=gybq8SFaAPA&t=678s
சுனிதா குறித்து சந்தோஷ் அளித்த பேட்டி:
மேலும், பேட்டி ஒன்றில் சந்தோஷ் இடம் சுனிதா அல்லது ரோஷினி இருவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டபோது நான் சுனிதாவை திருமணம் செய்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சந்தோஷ் எமோஷனலாக பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தான் நான் சுனிதாவை பயன்படுத்தினேன் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், நான் அப்படி எதுவும் செய்யவில்லை. சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி என்று கூறியிருக்கின்றார்





