குக்கு வித் கோமாளி சீசன் 3 யில் கோமாளிகள் மாற்றமா ? போட்டியாளர்கள் யார் யார் ? செஃப் தாமு சொன்ன சூப்பர் தகவல்.

0
2447
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றனர். அதே போல் கடந்த வாரம் செலிப்ரேஷன் வீக் கொண்டாடபட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த சீசன் இந்த வாரத்தோடு நிறைவடைய இருப்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தாமுவிடம் சீசன் 3 எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாமு,  இந்த சீஸன் முடிஞ்சது ரொம்ப கஷ்டமா இருக்கு. சீசன் 3 100% வர வாய்ப்பு இருக்கு. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல வரும். கோமாளிகள் இவங்களேதான். குக்ஸ் பெரும்பாலும் பிக்பாஸ், சீரியல் நட்சத்திரங்கள்னு வர வாய்ப்பு அதிகம் இருக்குது.

-விளம்பரம்-
Advertisement