கோமாளியாக களமிறங்கிய பலருக்கும் பிடித்த KPY பிரபலம், ஆங்காரக ப்ரோமோஷன் பெற்ற கோமாளி – கலைகட்ட இருக்கும் CWC சீசன் 5

0
333
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக களமிறங்கும் கோமாளி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்படி பட்ட நிலையில் கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. இதனை அடுத்து பலருமே ஐந்தாவது சீசன் எப்போது என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

ஆனால், சிலர் குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்றெல்லாம் கூறி இருந்தார்கள். குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: அதற்கு ஏற்ப நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேர் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இவரை அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தயாரிப்பு நிறுவனம் Media Masons 10 விலகி விட்டது. இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபனும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் உடனுக்குடன் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பின் இந்த ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில், நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன், பிக் பாஸ் 7 விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனவாக நடிக்கும் ஹேமா, நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா, திவ்யா துரைசாமி, வசந்த் ஆகியோர் விஜய் டிவி தரப்பில் பேசப்பட்டு உறுதியாகப்பட்டிருக்கிறது. இன்னும் சில போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இவர்களைத் தொடர்ந்து கடந்த பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட தினேஷ், பூர்ணிமா ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பிரெஞ்ச் காரர் கிருஷ்ணா மெக்கன்ஷியின் பெயரும் அடிபட்டு வருகிறது. தற்போது கோமாளிகள் தொடர்பான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கம் போல் தொகுப்பாளர்களாக ரக்சன்- மணிமேகலை களம் இறங்கி இருக்கிறார்கள். சுனிதா, குரேசி, புகழ் ஆகியோர் இந்த சீசன்களிலும் கோமாளிகளாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய கோமாளியாக விஜய் டிவி ராமர் வருகிறார். ராமரை பற்றி சொல்லவே தேவையில்லை. விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியில் ராமர் தான் இருப்பார். அவருடைய நகைச்சுவையும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அதே போல கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனில் ஆங்காரக ப்ரொமோட் ஆகி இருக்கிறார்.

Advertisement