விலகிய நடுவர் மற்றும் தயாரிப்பு ஹெட், தாமுவுடன் இணையப் போவது யார்? CWC சீசன் 5 அப்டேட்

0
440
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்படி பட்ட நிலையில் கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி :

இதனை அடுத்து பலருமே ஐந்தாவது சீசன் எப்போது என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டார்கள். ஆனால், குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலக இருப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேர் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10.

நிகழ்ச்சி தொடர்புடையவர் பேட்டி:

இது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபன் அவர்களும் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், சில குட்பாய் ரொம்பவே கடினம். நிறைய சில நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல கடந்த நான்கு சீசன்களும் குடும்பமாக நினைவுகள் மறக்க முடியாதது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் என்றைக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து சொன்னது:

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் விலக இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? பழைய கோமாளிகள் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து நிகழ்ச்சி தொடர்புடைய அவர்கள் கூறியிருப்பது, மீடியா மேஷனுக்கும் விஜய் டிவிக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்குமே தெரியவில்லை. ஆளு ஆளுக்கு ஒவ்வொரு தகவலை சொல்கிறார்கள். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியுமே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம்.

நிகழ்ச்சி நடுவர் குறித்து சொன்னது:

அடுத்த சீசன் எப்படி வரப்போகிறது என்று தெரியவில்லை. அறிவிப்பு, ஜட்ஜ்கள் போட்டியில் குறித்த விவரம் எல்லாம் வெளியாகி நிகழ்ச்சி தொடங்கினால் தான் தெரியும். தாமு விஜய் டிவியில் தான் இருப்பார். அடுத்த சீசன் அவர் நிச்சயம் இருப்பார். அவருடன் இன்னொரு நடுவராக வேறொருவர் கலந்து கொள்வார். சீக்கிரத்திலேயே சேனல் இது தொடர்பாக அறிவிப்பு கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மற்றொரு நடுவராக நடிகர் சுரேஷ், நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக ஜெகன் இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement