குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில ரியாலிட்டி தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில், குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கினார்.
குக் வித் கோமாளி:
இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள். சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார். மேலும், கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. காரணம், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் மணிமேகலை, ரக்சன் உடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். அதோடு ஆரம்பத்திலிருந்து மணிமேகலை -பிரியங்கா இடையே சலசலப்பு ஏற்பட்டு இருந்திருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை தொடங்கும் நிலையில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்தது.

குக் வித் கோமாளி 6:
அதன் பின் நிகழ்ச்சியை விட்டே மணிமேகலை வெளியேறி விட்டார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஒளிபரப்பாகி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே போல் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். இருந்தாலுமே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது. மேலும், குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ப்ரோமோ வீடியோ:
அதில் புகழ், ராமர், தங்கதுரை என ஆகியோர் கலந்து இருக்கிறார்கள். இந்த முறை சர்ப்ரைஸ் ஆக பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் பெரிதாக விளையாடவில்லை என்றாலும் நிகழ்ச்சி முடியும் போது பிரமாதமாக விளையாடி வந்தார். அதோடு இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தை சௌந்தர்யா தான் பிடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், சீரியல்கள் எல்லாம் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.






