குக்கு வித் கோமாளி செமி பைனல் ரவுண்ட், Twist கொடுத்த நடுவர்கள் – பைனலுக்கு தகுதி பெற்றவர்கள் யார் யார் தெரியுமா ?

0
1508
Cooku
- Advertisement -

குக்கு வித் கோமாளி சீசன் 4ன் செமி பைனல் சுற்றின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்கள் கடந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.இப்படி பட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி சீரியல் VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதோடு மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி இந்த முறை குக்காக வந்து இருக்கிறார். இதில் இந்த சீசனையும் ரக்சன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இடையில் இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கலை இயக்குநர், நடிகருமான கிரண் ஆகியோர் வையில் கார்ட் எண்ட்ரி கொடுத்தனர்.

-விளம்பரம்-

வெளியேறிய நபர்கள்:

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து கிஷோர், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன், கஜேஷ், ஆன்ட்ரியன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிருக்கிறார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ஏற்கனவே விசித்ரா பைனலுக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த சீசனின் செமி பைனல் சுற்று இந்த வாரம் நடைபெற்றது. இதில் கிரண், மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

செமி பைனல் முடிவுகள் :

இந்த நால்வரில் இருந்து மூன்று நபர்களை பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்க போவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி, இரண்டாவது பைனலிஸ்ட்டாக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இறுதியில் கிரணையும் பைனலுக்கு தேர்ந்தெடுத்து இன்று போட்டியிட்ட 4 போட்டியாளர்களையும் பைனலுக்கு அனுப்பி நடுவர்கள் ட்விஸ்ட் கொடுத்துவிட்டனர். மேலும், வைல்ட் கார்டு சுற்றில் இருந்து ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி சீசன் 4ல் பைனலிஸ்ட் ஆன அனைவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement