ஒரு எபிசோடுக்கு 50,000 முதல் 10,000 வரை - குக்குக்கும் கோமாளிகளுக்கும் ஒரு எபிசோடுக்கு எவ்வளவோ சம்பளம் தெரியுமா ?

By Rajkumar · 26/2/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : தனது அண்ணனுடன் ராஜா ராணி சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம் - இது தான் அவர் அண்ணனா.

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இறுதியாக வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ரித்திகாவும் வெளியேறினார். முதல் சீசனை விட இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார் போல சம்பளமும் வழங்கப்படும் அல்லவா.

அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள நபர்களில் யார் யார் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். (இந்த சம்பளம் ஒரு எபிசோடுக்கு மட்டும் என்ற கணக்கில் )

behindtalkies AMP · Quick view
View full