தனது அண்ணனுடன் ராஜா ராணி சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம் – இது தான் அவர் அண்ணனா.

0
1846
sanjeev
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இருந்தது. இந்த தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக திகழ்ந்து வந்தார்கள். அதையும் தாண்டி இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியை நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆல்யா வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்பதால் அவரது பெற்றோர்கள் ஆல்யாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் அவரது தந்தை மட்டும் ஆல்யா-சஞ்சீவிடம் பேசி வந்தார்.பின்னர் ஆல்யாவின் அம்மாவும் பேசத்துவங்கினார்.

- Advertisement -

ஆல்யா மானஸாவிற்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி செட்டில் வளைகாப்பு சிம்பிளாக நடைபெற்றது. அப்போது தான் ஆல்யாவின் அம்மா நேரில் வந்து ஆல்யாவிடம் பேசினார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தங்களது திருமணத்தில் இருந்த பிரச்சனை குறித்து பேசி இருந்தார்கள். அதில் ஆல்யா பேசுகையில், ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் உண்மையாக காதலிக்கிறோம் என்று நம்பவில்லை. பின்னர் நான் பெற்றோர்களிடம் சொன்னபோது அவர்கள் வேறு வேறு ஜாதி என்பதால் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

அதேபோல அந்த சமயத்தில் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை. நான் சிலகாலம் யார் தயவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதுபோக இது ஜாதி கலப்பு திருமணம் என்பதாலும் ஏற்க மறுத்தார்கள் என்று கூறினார். அதன் பின்னர் பேசிய சஞ்சீவ், நாங்கள் முதலில் ஆலியா வீட்டிற்கு சென்று பெண் கேட்டோம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மதம் என்பதால் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறி இருந்தார். சஞ்சீவ் பற்றி இத்தனை விஷயங்கள் இருந்தாலும் அவருக்கும் ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

-விளம்பரம்-
Advertisement