-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு அடித்த லக் – முதல் படமே இவருடன் தான்.

0
1744
shivangi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து இருந்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-

இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இப்படி ஒரு நிலையில் இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரத்திற்கு முன்னர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.

சிவகார்த்திகேயன் பாலாவை பாராட்டியதோடு ஷிவாங்கி போலவே மிமிக்கிரி செய்து அசத்தி இருந்தார். மேலும், இது போல ஒரு தங்கச்சி இல்லையே என்று பீல் செய்தார் சிவகார்த்திகேயன். மேலும், இதில் உள்ளவர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறி இருந்தார் சிவகார்த்திகேயன். இது ஒரு புறம் இருக்க குக்கு வித் கோமாளி நிகழ்ச்சில் ஷிவாங்கியின் அண்ணனாக இருந்து வரும் புகழ், சந்தானம் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news