ஷோக்கு வந்துட்டு இப்படி எல்லாம் பண்ணி எங்கள கடுப்பேற்ற கூடாது – சிவாங்கியை கிழித்தெடுத்த தாமு.

0
922
Shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

அதிலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீஸனின் குக்காக என்ட்ரி கொடுத்த ஆச்சரியப்பட வைத்தார். இதற்காக தனியாக சிறப்பு கோர்ஸ் எல்லாம் முடித்து வந்துள்ளார். அதிலும் இந்த சீசனில் முதல் எலிமினேஷன் சுற்று நடந்த எபிசோடில் செஃப் ஆப் தி வீக் எல்லாம் வாங்கினார் ஷிவாங்கி. இந்த சீசனில் இதுவரை கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பா ஆகிய 3 பேர் வெளியேறிய நிலையில் நேற்றய ஏபிசோடில் vj விஷால் வெளியேற்றப்பட்டடார்.

இந்த சீசன் ஆரம்பம் முதலே ஷிவாங்கி வெளியேறியாமல் இருப்பது தான் அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் இருந்து மூன்று சீசன்கள் வரை சமையல் பொருட்களின் பெயர் கூட தெரியாதமல் இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் இத்தனை வாரங்கள் வெளியேறாமல் இருப்பது ஆச்சரியம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல ஷிவாங்கியின் சமையலுக்கு மார்க் போடும் போது அவரை பாட வைத்து அவரது பாடும் திறன் மூலம் ஷிவாங்கியை ஒரு நல்ல போட்டியாளராக மக்கள் மத்தியில் காட்ட முயற்சி செய்கிறதா விஜய் டிவி என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஷிவாங்கி ”இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன்.

எங்களின் பெஸ்ட்டை வெளிக்கொண்டுவர நிறைய தியாககங்கள் செய்கிறோம். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஷிவாங்கிக்கு பாவக்காய் வரவே அதைகண்டதும் அவர் வாய்ப்பில்லை என்று கூறினார். இதனால் கடுப்பான தாமு,இது ஒரு போட்டி என்ன சமைக்க கொடுத்தாலும் ஏத்துக்கணும் நான் சமைக்க மாட்டேன் என சொல்ல கூடாது. இப்படி அடம்பிடித்து எங்களை கோபப்பட வைக்காதீங்க.

Advertisement